காத்து வாங்கிய நிகழ்ச்சி… டோக்கன் கொடுத்து ஆட்களை திரட்டிய திமுகவினர்… இறுதியில் ஏமாற்றம் அடைந்த மக்கள்!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 2:36 pm

தேனி : அண்ணா நினைவு தினத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க கூட்டம் இல்லாததால், அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வந்தால் பரிசு டோக்கன் கிடைக்கும் என கூறி திமுகவினர் கூட்டம் சேர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் கூட்டம் கூட்டவேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் பரிசு கிடைக்கும் என பெண்கள் உட்பட பலரிடம் திமுகவினர் சொல்ல, ஏதோ பெரிதாக இருக்கும் என நம்பி வந்த அனைவருக்கும் டீ மற்றும் வடைகளுக்கான டோக்கன் கொடுத்தனர்.

பெரிதாக ஏதோ பரிசு பொருள் கிடைக்கும் என நம்பி வந்த அனைவரிடமும், அந்தக் கடையில் டீ குடிக்க டோக்கன் வாங்கி செல்லுங்கள் என்றனர் திமுகவினர். முணுமுணுத்த படி, ‘இந்த டீ வடைக்காகவா வந்தோம்’, என்றவாறே வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

  • I will campaign for Vijay… Famous actress makes a bold announcement! விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!