துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 100க்கும் மேற்பட்டோர் பலி : சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 12:58 pm

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.

துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயு பைப்லைன் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, துருக்கியில் அவசர நிலையை பிரகடனம் செய்த அரசு, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலி சுனாமி பேரலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

  • I will campaign for Vijay… Famous actress makes a bold announcement! விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!