குறட்டை விடும் பழக்கத்திலிருந்து விரைவில் மீண்டு வர சில டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
14 March 2023, 4:08 pm
Quick Share

பலருக்கு தாங்கள் குறட்டை விடுகிறார்கள் என்பது தெரியாமலேயே குறட்டை விடுவார்கள். ஆனால் குறட்டை உங்கள் அருகில் தூங்கும் நபரின் இரவை மோசமாக்கும். நீங்களும் உங்கள் அருகில் படுத்து இருப்பவர்களும் நிம்மதியாக தூங்குவதற்கு குறட்டை பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

உங்கள் எடை அதிகரித்திருந்தால், நீங்கள் குறட்டை விடுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். இப்படி இருந்தால், உடல் எடையை குறைப்பது உங்கள் குறட்டை பிரச்சனையை தீர்க்கலாம். இருப்பினும், மெலிந்தவர்களும் குறட்டை விடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பக்கவாட்டில் படுத்து தூங்க முயற்சிக்கவும். இது உங்கள் நாக்கு உங்கள் தொண்டையின் பின்புற சுவரைத் தொடுவதைத் தடுக்கும்.

உங்களால் பக்கவாட்டில் தூங்க முடியாமல், மல்லாந்து படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், உங்கள் தலையணையை சில அங்குலங்கள் உயர்த்தி வைக்கவும். கூடுதல் தலையணை வைத்திருப்பதும் நன்றாக வேலை செய்யலாம்.

புகைபிடித்தல் மற்றும் குடிப்பது குறட்டை போன்ற தீங்குகளை விளைவிக்கும். அவை உங்கள் தசைகளை தளர்த்தலாம். இது குறட்டைக்கு வழிவகுக்கும். இது உங்கள் சுவாச செயல்முறையை கடினமாக்கும்.

நல்ல தூக்கம் இல்லாததால் அதிக சோர்வு ஏற்படுவதைத் தடுக்கவும். நீங்கள் தூங்க வேண்டியதை விட குறைவான மணிநேரம் தூங்கும்போது, உங்கள் தசைகள் நெகிழ்ந்து, நீங்கள் அதிகமாக குறட்டை விடுவீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 361

0

0