திடீரென தமிழகம் வரும் பிரதமர் மோடி… 27ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுடன் நடக்கும் சந்திப்பு ; வெளியானது முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
15 March 2023, 10:23 am

சென்னை : வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விமானப் போக்குவரத்துக்கு வசதியாக 2வது விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதற்கான இடமாக பரந்தூரை தமிழக அரசு தேர்வு செய்து கொடுத்தது. ஆனால், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 27ம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்த நிலையில், அதனை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. இந்த திறப்பு விழாவில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!