வங்கி கணக்கை ஆதாரில் இணைத்தால் தான் இனி சம்பளம் : மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 9:29 am

வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாளர்களில், 42 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் (AEPS) கீழ் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்றும், எதிர்வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்றைய மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 100 நாள் வேலைத் திட்ட ஊதிய செயல்முறைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக கார்கே முன்வைத்த கேள்விகள்,

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS) கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?

மாநில வாரியாக ABPS முறையின் கீழ் இணைக்கப்பட்ட, இணைக்கப்படாத பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்கள் தருக?

ABPS முறையின் கீழ் வராததால் ஊதியம் மறுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களைத் தருக?

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ABPS முறையை கட்டாயமாக்குவதற்கான காரணங்களைத் தருக?

ABPS முறையினால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் தருக ” ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, “

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (AEPS) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் வாரியாக AEPS முறையின் கீழ் இணைக்கப்பட்ட/ இணைக்கப்படாத பணியாளர்கள் பட்டியலைப் பொறுத்த வரையில், உத்தரபிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் AEPS முறையின் கீழ் வரவில்லை.
தமிழ்நாட்டில், 42 லட்சத்துக்கும் அதிகமானோர் (42,88,339) ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டட்தின் (AEPS) கீழ் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

  • I will campaign for Vijay… Famous actress makes a bold announcement! விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!