யானைப் பசிக்கு சோளப் பொரியா? சாலையில் பாலைக் கொட்டி கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 8:50 am
Milk Protest - Updatenws360
Quick Share

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலையில் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் பாலை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு அடுத்த நசியனூரில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Views: - 68

0

0