கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி வெட்டிய போதை ஆசாமிகள்… 12 பேருக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் அதிர்ச்சி!!!

Author: Babu Lakshmanan
26 April 2024, 12:44 pm
Quick Share

ஆவடி அருகே பெண்களை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட தாய், மகன்கள் உள்பட 12 பேரை சரமாரியாக போதை ஆசாமிகள் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக்குகளான அபினேஷ் (25), விஷ்ணு (22) மற்றும் முத்து ஆகிய மூன்று இளைஞர்கள், மது மற்றும் கஞ்சா போதையில் அப்பகுதியில் செல்பவர்களுடன் தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை 3பேரும் ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பெண்களையும் தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (38) மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்திகளை எடுத்து வந்து, சீதாலட்சுமி மற்றும் அவரது மகன் கமலேஷை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

மேலும் படிக்க: மதுபோதையில் தகராறு… பஸ் ஸ்டேண்டில் திருநங்கைக்கு அரிவாளால் வெட்டு.. கோபக்கார இளைஞன் எஸ்கேப்!!

இதில் இருவருக்கும் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த, அதே பகுதியை சேர்ந்த சந்திரலேகா (40) மற்றும் அவரது மகன் விஜய் (20) இருவரும் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது, அவர்களையும் அந்த போதை இளைஞர்கள் வெட்டியுள்ளனர்.

தொடர்ந்து, அந்த வழியாக சென்று கொண்டிருந்த கணேஷ் (18) என்ற கல்லூரி மாணவன், வாகன ஓட்டிகள் என சுமார் 12 பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், போதையில் சுற்றித்திரிந்த 2பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். தலைமறைவாக உள்ள முத்துவை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 176

0

0