ஈவு இரக்கமே இல்லாமல் மகள்களிடம் பாலியல் சீண்டல்.. வெளிச்சத்திற்கு வந்த தந்தையின் லீலைகள்: அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 10:02 am

ஈவு இரக்கமே இல்லாமல் தான் பெற்ற இரண்டு மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காமக்கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் அரக்கோணம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி பார்த்திபன் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது .

மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் 9ம் வகுப்பும், இளைய மகள் 8 ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்நிலையில் தான் பெற்றெடுத்த இரண்டு மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தந்தை தன்னிடம் தவறாக நடக்கிறார் என்பதை அந்த சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளால் முழுவதுமாக உணர முடியவில்லை .

இதற்கு இடையே மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது தான் தன்னுடைய தந்தை தன்னிடம் தவறாக நடக்கிறார் என்பதை உணர்ந்து ஆசிரியர் ஒருவரிடம் அக்காள், தங்கை தெரிவித்துள்ளனர்.

அந்த ஆசிரியர் தைரியமாக மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட சமூக பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை என்பது தெரியவந்தது.

பின்னர் தந்தை மீது மகள் ஒருவர் அரக்கோணம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காமக்கொடூர தந்தையான கட்டட மேஸ்திரி பார்த்திபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்த போது எனக்கு எதுவுமே தெரியாது என்று கணவனுக்கு மனைவி வக்காலத்து வாங்கியுள்ளார்.

மேலும் நடக்கும் சம்பவங்கள் எதையும் வெளியில் சொல்லக்கூடாது என்றும் மனைவியை குடிபோதையில் அடிக்கடி கொடுமை படுத்தியுள்ளான்.

இதற்கு பயந்து கொண்டு மனைவி போலீசாரிடம் வாய் திறக்காதது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் காவேரிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…