ஆஸ்கர் வென்ற தம்பதியிடம் குட்டி யானையை அனுப்ப முடிவு.. பிரிய மனமில்லாமல் கதறி அழுத வனத்துறை ஊழியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 10:29 am
Baby Elephant - Updatenews360
Quick Share

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் அடுத்த கட்டமடுவு கிராமத்தில் தண்ணீர் நிறைந்த சுமார் 30 அடி ஆழமுள்ள ஒரு விவசாய கிணற்றில் குட்டி யானை ஒன்று கடந்த 11ம் தேதி தவறி விழுந்தது.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் இந்த குட்டி யானையை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட இந்த குழந்தை பருவமுள்ள குட்டி யானையை டாட்டா ஏசி வாகனம் மூலம் ஏற்றி, ஒகேனக்கல் அடுத்த சின்னாறு வனப்பகுதியில் யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது.

இருப்பினும் கூட்டத்துடன் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதுமலை சரணாலயத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு பொம்மன்-பெல்லி தம்பதியினரிடம் வளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட உள்ளது.

இதற்காக பென்னாகரம் அடுத்துள்ள ஒட்ரபட்டி வனப்பகுதியில் இருந்து யானை குட்டி வாகனத்தில் ஏற்றப்பட்ட பொழுது, ஐந்து நாட்களாக இரவு பகல் என்று தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்த வன ஊழியர் மகேந்திரன் இன்று யானை குட்டி தன்னிடமிருந்து பிரிந்து சென்ற துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார்.

யானை குட்டி யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த சோகம் ஒருபுறம் இருக்க தற்போது ஐந்து நாட்கள் தன்னுடன் இருந்த குட்டியை பிரிய முடியாமல் வன ஊழியர் கதறி அழுத சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

Views: - 436

0

0