நாகை TO இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து : வெளியான அறிவிப்பு.. பயணிகள் வரவேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 1:38 pm
naagai
Quick Share

நாகை TO இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து : வெளியான அறிவிப்பு.. பயணிகள் வரவேற்பு!

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சீதோஷ்ண நிலை காரணம் காட்டி படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வருகின்ற மே மாதம் 13 ஆம் சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு பயணியர் படகு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளது

ஏற்கனவே செரியாபாணி என்ற பயணியர் படகு இயங்கிய நிலையில் வேறொரு படகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பயணியர் படகு கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் வசூல் செய்யப்பட உள்ளது

அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை பயணியர் படகு மே10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது. இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால், இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது.

சீதோசன நிலை காரணமாக, நாகை காங்கேஷன் இடையே நிறுத்தப்பட்டிருந்த பன்னாட்டு பயணியர் படகு சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளதால், சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 126

0

0