மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை விவகாரம்.. அந்தர் பல்டி அடித்த திமுக அரசு ; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
20 March 2023, 1:15 pm

மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் விவகாரத்தில் திமுக அரசு அந்தர் பல்டி அடித்துவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

2023-24ம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்கட்விச தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேச முற்பட்டார். ஆனால், சபாநாயகர் அப்பாவு இதற்கு அனுமதி மறுத்தார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்காததை கண்டித்து கோஷமிட்ட அதிமுகவினர், அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உள்ளிட்ட எல்லா வரிகளும் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜி.எஸ்.டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்து இருப்பதால், அரசின் வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்கு காரணம் என்ன..? திமுக ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்த போதும் வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக உள்ளது.

அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு, தற்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்துள்ளது. அதோடு, ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை.

ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை. நீட விலக்கு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம், எனக் கூறினார்.

  • chinmayi gives strong reply for controversy on ranbir kapoor eating beef மாட்டுக்கறி சாப்புட்டு இராமரா நடிக்கலாமா? சர்ச்சைக்குள் சிக்கிய ரன்பீர் கபூர்! சின்மயியின் தரமான பதிலடி!