சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ : பட்ஜெட் கூட்டத் தொடரில் நடந்த அதிர்ச்சி வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 8:52 am

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ : பட்ஜெட் கூட்டத் தொடரில் நடந்த அதிர்ச்சி வீடியோ வைரல்!!

திரிபுராவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து சட்டப்பைரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாக்பாசா தொகுதி பாஜக எம்எல்ஏ ஜதப் லால் நாத், சட்டப்பேரவையில் அமர்ந்து கொண்டே தனது செல்போனில் ஆபாச படம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டசபையில் நடந்த போது தான், இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பேசிக் கொண்டிருந்தபோது பாஜக எம்.எல்.ஏ ஆபாச வீடியோ பார்த்துள்ளார்.

அதனை அவரது பின்னால் அமர்ந்திருந்த யாரோ ஒருவர் படம் பிடித்துள்ளார். வீடியோ வேகமாக பரவிய நிலையில், விரைவில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் ராஜிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆபாச படம் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…