சூரி ஹீரோ என்பதால் சொதப்பினாரா இளையராஜா? “விடுதலை” படம் எப்படி இருக்கு?

Author: Shree
31 March 2023, 10:39 am

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.

பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழகம் முழுக்க இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிம்புவின் பத்து தல படத்துடன் மோதியுள்ள இப்படம் கதை ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் கூறுகிறது.

இப்படத்தை படத்தை பார்த்த ஆடியன்ஸ் கலவையான விமர்சனத்தை கூறியுள்ளார்கள். ஆடியன்ஸ் ஒருவர், எனது அபிமானத்திற்குரிய வெற்றிமாறனிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என இந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு ரசிகை, இடைவேளைவரை படம் மிக அருமையாக இருக்கிறது. எமோஷன்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ஆனால் பின்னணி இசை சுமாராகத்தான் இருக்கிறது. பாடல்கள் நன்றாக இருக்கின்றன என ரசிகை குறிப்பிட்டிருக்கிறார். எனவே இளையராஜா படத்தின் ஹீரோ சூரி என்பதால் கேர்ளசாக இருந்திவிட்டாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மற்றும் பலர் சூரியின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி தள்ளியுள்ளனர். வெற்றிமாறனின் கதை , இயக்கம் வழக்கம் போலவே அருமையாக இருந்தாலும் மாஸ் ஹீரோவான சிம்புவை ஓவர் டேக் செய்யமுடியாமல் திணறிவிட்டார் சூரி.

  • santhanam new movie directed by gvm இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!