இத சாப்பிட்டா பற்கள் வலிமையாகும்னு சொன்னா நிச்சயமா நம்ப மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
27 April 2023, 6:45 pm

மாங்காய் வாங்கி அதில் உப்பு, மிளகாய்த்தூள் தொட்டு சாப்பிடுவது நம் அனைவருக்கும் பிடிக்கும். நாம் ஆசை ஆசையாய் சாப்பிட்ட மாங்காயில் சுவை மட்டுமல்லாமல் எக்கச்சக்கமான ஆரோக்கிய நலன்களும் காணப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மாங்காயில் வைட்டமின் சி, கே, ஏ, பி6 மற்றும் போலேட் போன்றவை காணப்படுவதால் ஆயுர்வேதம் செரிமான பிரச்சனைகள், கண் பார்வை மற்றும் உடல் எடையை குறைக்க மாங்காயை பரிந்துரைக்கிறது.

செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாங்காய் ஒரு சிறந்த தீர்வு. இது செரிமான அமிலத்தின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். உங்களுக்கு மலச்சிக்கல், அசிடிட்டி, நெஞ்செரிச்சல், காலை சுகவீனம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மாங்காய் சாப்பிடுவது உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

மாங்காயில் காணப்படும் வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்கிறது. கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.

ஆரோக்கியமான கல்லீரலுக்கு பச்சை மாங்காய் சிறந்தது. கல்லீரல் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் அடிக்கடி மாங்காய் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

கெட்ட சுவாசம், ஈறுகளில் இரத்தக் கசிவு மற்றும் சொத்தைப்பல் போன்ற பிரச்சனைகளுக்கும் மாங்காய் உதவக்கூடும். மாங்காய் பற்களை சுத்தமாகவும், வலிமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • prakash raj criticize vijay and acting in jana nayagan movie விஜய் முகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? ஜனநாயகன் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜிற்கு வந்த சங்கடம்!