மால டம் டம் மஞ்சர டம் டம்… காதலனுடன் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை

Author: Shree
14 May 2023, 8:09 am

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பரினீதி சோப்ரா முதலீட்டு வங்கியியல் வேலை பார்க்க விரும்பி லண்டன் சென்று படித்தார். பரினீதி படிப்பை முடித்துவிட்டு 2009ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். அந்த நேரம் இந்தியாவில் பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் இருந்தது, எனவே அவர் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக சேர்ந்தார்.

பின்னாளில் அந்த நிறுவனம் அவரை கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தது. 2011 ஆம் ஆண்டில் Ladies vs Ricky Bahl எனடர் படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் திரைப்படமே ஹிட் அடித்தது. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார். இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இவர் சிறந்த நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த பாடகி. பாலிவுட் திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடியிருக்கிறார்.

இந்நிலையில் இவர் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஐ.பி.எல் கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்பட்டனர். இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில் தற்போது திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளனர். இதில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என நெருங்கியவர்கள் மட்டும் கலந்துக்கொண்டுள்ளனர்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?