CM ஸ்டாலின் அத மட்டும் செய்தால் ரூ.10 கோடி தரேன் : சீமான் பேச்சால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2023, 7:58 pm

மே 18ம் தேதி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக சென்னையிலிருக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அவருக்கு விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

கள்ளச்சாரயம் விற்பனை செய்தவர்களிடம் பணம் வாங்கி நிவாரணம் வழங்க வேண்டும், மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம் என்றார்.

கள்ளச்சாராயம் விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றால் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி அப்போதே பதவி விலகி இருக்க வேண்டும் என்ற அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடியும் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு இறந்தால் நான் ரூ.10 கோடி வழங்குகிறேன் என்றார்.

2 ஆண்டுகள் கடந்தும் கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு குறைய வேண்டும் என்றால் மாற்று அரசு வேண்டும் என்றார்

திமுகவின் சொத்து பட்டியலை மட்டும் வெளியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை ஏன் வெளியிடவில்லை என தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் தெரிவித்தார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?