ரூ.10 கூடுதலாக மது விற்கக் கூடாது.. இரவு 10 மணி தான்… அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டிப்பான உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 5:26 pm

சென்னை ; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்களே கேள்வி எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் ரூ.10 வசூலிக்கும் வீடியோக்களில் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம், டாஸ்மாக் விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்து மாவட்ட மேலாளர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்தால் அபராதம் விதிக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் வைக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும், எனக் கூறினார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?