துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சிஆர்பிஎப் வீரர்? முகாமில் இருந்து சடலமாக மீட்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 12:43 pm

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது.இந்த படைப்பிரிவில் வீரராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெகன்(32) பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை காவல்பணியில் இருந்த அவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் விரத்தி அடைந்த ஜெகன் எஸ்எல்ஆர் துப்பாக்கியால் இரண்டு ரவுண்டு கழுத்தில் சுட்டதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!