சுக்கு பொடியை இப்படி யூஸ் பண்ணா தலைவலி பத்து எண்ணுறதுக்குள்ள மாயமா மறஞ்சுடும்!!!

Author: Hemalatha Ramkumar
29 May 2023, 7:33 pm
Quick Share

இந்தியாவில் இருக்கக்கூடிய சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மட்டுமின்றி ஜப்பானில் பயன்படுத்தப்படும் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் சுக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு நிழலில் உலர்த்தும் போது, இஞ்சியில் இருக்கக்கூடிய நீர் நீக்கப்பட்டு சுக்கு கிடைக்கிறது. நாம் பயன்படுத்தக்கூடிய மருந்துகளில் சிறிதளவும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளில் முதன்மையானது சுக்கு ஆகும். இந்த சுக்கு அதிகப்படியான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

*சுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மிகச்சிறந்த பொருளாகும். உணவுப் பொருட்களுடன் தொடர்ந்து சுக்கு சேர்த்து உண்ணும் போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் நம் உடல் நோய்க்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

*நம் உடலில் பித்த நீரின் அளவு சீராக இல்லை எனில், நமது உடல் குடல் புண்கள், மலச்சிக்கல், தலைவலி, ரத்த கொதிப்பு, வாந்தி, மயக்கம், உடல் சோர்வு போன்ற பலவிதமான நோய் தாக்கத்திற்கு உள்ளாகிறது. சுக்குப்பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது பித்த நீரின் அளவு சீராக வைக்கப்படுகிறது.

*காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற சிறு பிரச்சனைகளுக்கு சிறிதளவு சுக்குப்படியுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து நெற்றியில் பூசி வரும்போது இவை குணமாகிறது.

*அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுக்கு மற்றும் மல்லி ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் டீ அல்லது காபியுடன் கலந்து குடித்து வரலாம். இதனால் அஜீரண கோளாறு சரியாகிறது.

*கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வரக்கூடிய பித்த வாந்திக்கு சுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சிறிதளவு சுக்குப்பொடியை தேனுடன் சேர்த்து வரும்போது இந்த பித்த வாந்தி கட்டுப்படுத்தப்படுகிறது.

*சுக்கு பொடியை நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சுக்கு தைலம் தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. இதைத் தலையில் தேய்த்தால், சைனஸால் வரும் தலைவலி சரியாகிவிடும்.

*காதுக்குள் இரைச்சல் கேட்கும் பிரச்சனை, காது இரைச்சலால் தடுமாற்றம் மற்றும் காதில் சீழ் வடிவேல் போன்ற பிரச்னைகளுக்கு தலையில் சுக்குத்தைலம் தேய்த்துக் குளிப்பது நல்ல பலனைத் தருகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 652

0

0