நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து… தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு ; அரசு நிகழ்ச்சிகளும் ரத்து என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
3 June 2023, 9:08 am

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ நேற்று ஒடிசா மாநிலத்தில்‌ ஏற்பட்ட ரயில்‌ விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொண்டுள்ளதோடு, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, இரயில்‌ விபத்தில்‌ காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும்‌, தேவைப்படின்‌, தமிழ்நாட்டின்‌ மருத்துவக்‌ குழு மற்றும்‌ இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும்‌ ஒடிசா மாநில முதலமைச்சரிடம்‌ தொலைபேசி மூலம்‌ தெரிவித்துக்‌ கொண்டார்‌.

மேலும்‌, மீட்பு பணிகளில்‌ உடனிருந்து தமிழ்‌ நாட்டினருக்குத்‌ தேவையான உதவிகளைச்‌ செய்திட மாண்புமிகு போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ திரு. எஸ்‌.எஸ்‌.சிவசங்கர்‌, போக்குவரத்துத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு. குமார்‌ ஜயந்த்‌, இ.ஆ.ப., ஆசிரியர்‌ தேர்வாணையக்‌ குழுவின்‌ தலைவர்‌ திருமதி அர்ச்சனா பட்நாயக்‌, இ.ஆ.ப., ஆகியோர்‌ கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அனுப்பி வைத்துள்ளார்‌.

இந்நிலையில்‌ ஒடிசா இரயில்‌ விபத்தில்‌ உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்‌ வகையில்‌ இன்று ஒரு நாள்‌ மட்டும்‌ துக்கம்‌ அனுசரிக்கப்படும்‌. மேலும்‌, அரசின்‌ சார்பில்‌ இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகமும்‌ ரத்து செய்யப்படும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌, என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!