‘என்னதான் கலெக்டராக இருந்தாலும் விவசாயி மகன் தான்’… கலப்பையைப் பிடித்து ஏர் உழுத மாவட்ட ஆட்சியர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 5:06 pm

கலப்பையைப் பிடித்து வேலூ;h மாவட்ட ஆட்சியர் ஏர் உழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்த்தான் கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சாலை அமைப்பு தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். ஜார்த்தான்கொல்லை கிராமத்தை அவர் பார்வையிட்டபோது, விவசாயி ஒருவர் மாடு உழுது கொண்டிருந்தார்.

இதனைப்பார்த்த கலெக்டர் அங்கு சென்று விவசாயியிடம் கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து, கலெக்டர் குமார வேல் பாண்டியன் கலப்பை பிடித்து ஏர் உழுது மகிழ்ந்தார்.

https://player.vimeo.com/video/839683863?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • prakash raj criticize vijay and acting in jana nayagan movie விஜய் முகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? ஜனநாயகன் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜிற்கு வந்த சங்கடம்!