‘கேட்டதும் Loan-ஐ கொடுக்கறான்யா… என் குரல்வளைய இப்ப நசுக்கறான்யா’… ஆன்லைன் லோனுக்கு எதிராக ஓட்டுநர் வெளியிட்ட பாடல்..!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 4:09 pm
Quick Share

அன்றாடம் கூலிகள் ஆன்லைன் லோன் வாங்காதீர்கள் என்று அதிக வட்டியால் பாதிக்கப்பட்ட டெம்போ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்ட பாடல் வைரலாகி வருகிறது.

ஆன் லைன் ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லோன் கொடுத்து வாடிக்கையாளர்களை மிரட்டி அதிக பணம் வசூலித்து பல மோசடிகள் அரங்கேறி பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பல மோசடி நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆன் லைன் ஆப் மூலம் லோன் பெற்று வட்டி மேல் வட்டி கட்டி பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டம் ஆழ்வார்கோயில் பகுதியை சேர்ந்த மினி வேன் டிரைவர் ஏ.ஆர்.சுமர் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ‘வட்டி எவ்வளவு போட்டாலும் கட்டலாம்னு உள்ளவங்க ஆன் லைன் லோன் எடுங்க, அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பம் நடத்திறவங்க தயவு செய்து ஆன்லைன் லோன் எடுக்காதீங்க. எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்,’ எனக் கூறியதோடு பாடல் பாடி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 2538

0

0