அண்ணாமலை ஏன் வாய் திறக்கல…. 5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் எங்கே..? பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 3:57 pm
Quick Share

5 லட்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் மாயமான விவகாரம் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் பேசாதது ஏன்..? என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தண்ணீர் பந்தலை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நேற்று காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டதாகவும், தற்போது இன்று காமராஜர் அரங்கில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 2018 முதல் 20 வரை உள்ள காலகட்டத்தில் சுமார் 70,772 கிலோ ஹேராயின் போதைப் பொருள் பிடிக்கப்பட்டது. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு 5 லட்சம் கோடி. இவை சிக்கிம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் போதை பொருட்கள் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: குடும்ப நிகழ்வுக்காக வெளியூர் சென்ற பெண்… திரும்பி வந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி ; போலீசார் விசாரணை…!!

பிடிக்கப்பட்ட போதைப் பொருட்கள் காணவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் தகவல் அறிய உரிமைச் சட்டத்தின் கீழ் அறிந்தது. அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பிய போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாயமானதாக மட்டுமே கூறினார். அது எவ்வாறு திருடப் போனது என்பது பற்றி எந்த விவரமும் அவர் கூறவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பாஜக ஆட்சி போதைப் பொருட்களை ஊக்குவிப்பதுதான். அதற்கு உதாரணம் அரசு கட்டுப்பாட்டில் இருந்த போதைப் பொருட்கள் திருடு போயிருப்பது. பாஜக இளைஞர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.

திமுக போதைப் பொருட்களை ஊக்குவிப்பதாக பிரதமர் முதல் மாநிலத் தலைவர் வரை அனைவரும் பேசினார்கள். ஆனால் இந்த விவகாரம் குறித்து பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை..? மேலும், உளவுத்துறை, கடல்படை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் என்ன செய்து கொண்டுள்ளது. இவர்களுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய போதைப்பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் முடியுமா.?

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் கர்நாடகா அரசால் ஒன்றும் செய்ய முடியாது. அரசியலுக்காக கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் அவ்வாறு பேசி வருகிறார்கள். காவிரி விவகாரம் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமை. இதற்கு நிச்சயம் தமிழக காங்கிரஸ் குரல் கொடுக்கும்.

உச்சநீதிமன்றம் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிற்கு சரியான உத்தரவை பெற்றுள்ளது. எந்த மாநிலத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று. ஆனால் காவேரி ஒழுங்காற்று குழு சரியாக செயல்படவில்லை. இதனை கண்காணிக்க வேண்டியது மத்திய அரசுதான். தமிழக தலைவர் அண்ணாமலை ஏன் மத்திய அரசுக்கு வலியுறுத்தவில்லை. ஊற்று எங்கே உருவாகிறதோ, அது பிரச்சனை கிடையாது. எங்கே சென்று நிறைவடைகிறதோ அங்கு தான் உரிமை அதிகம். அந்த வகையில் நமக்கு தான் அதிக உரிமை உள்ளது.

அமைதி மற்றும் ரேப்ரலி தொகுதியில் தற்போது வரை காங்கிரஸ் கட்சி சார்பில் ஏன் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்விக்கு, காங்கிரஸ் கட்சிக்கு எந்த பயமும் இல்லை. சுதந்திரத்தின் போது வெள்ளையர்களை விரட்டி அடித்தோம்!. ஒரு தலைவருக்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த வகையில் தான் இந்த தொகுதியில் வேட்பு மனு தற்போது தாக்கல் செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிட வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தேசிய தலைமைக்கு இந்த விவகாரம் குறித்து தெரியப்படுத்தி இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாடு கர்நாடகா காங்கிரஸை எதிர்த்து போராட்டம் கூட தயாராகி இருக்கிறோம், என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 117

0

0