வைகை அணை திறப்பு… 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!!
Author: Babu Lakshmanan16 மே 2024, 2:53 மணி
மதுரை ஆரப்பாளையம் வைகையாற்றை ஒட்டியுள்ள தரைப்பாலம் முழுவதிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரை மாநகரில் நேற்று இரவு தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த பரவலான மழை காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள தரைப்பாலத்தில் முழுவதுமாக மழை நீர் தேங்கியுள்ள நிலையில், சிம்மக்கல், கோரிப்பாளையம் முதல் விரகனூர் வரை செல்லக்கூடிய வாகனங்கள் மழை நீரில் முழுவதுமாக நனைந்தபடி செல்கின்றது.
மேலும், இருசக்கர வாகனங்கள் மழை நீரில் முழுவதுமாக நனைந்தபடி செல்லும்போது, சேறும் சகதியுமாக உள்ள தண்ணீர் பணிகளுக்கு செல்லக்கூடியவர்களின் ஆடைகள் மீது படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், கால்களை வாகனத்தின் மேல் வைத்தபடி பக்க இயக்கும்போது விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
மதுரை பைபாஸ் சாலை முதல் ஆரப்பாளையம் பகுதியில் இருந்து வைகை ஆற்று கரையோரத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் செல்லக்கூடிய தரைப்பால பகுதி முழுவதுமாக மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், வைகை ஆற்றில் அந்த பகுதி முழுவதிலும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ள நிலையில் ஆற்றில் உள்ள நீரும் செல்ல முடியாத நிலையில் தரைப்பாலத்தில் செல்வதால் தொடர்ந்து நீரின் அளவும் அதிகரித்துவருகிறது
0
0