குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

Author: Babu Lakshmanan
1 April 2024, 1:31 pm

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவமதித்ததாக தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு நேற்று ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவரது இல்லத்துக்கு சென்று விருதை நேரில் வழங்கினார். அப்போது, விருதைப் பெற்ற அத்வானியின் அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பது போன்றும், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நின்றிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்பியும், தூத்துக்குடி வேட்பாளருமான கனிமொழியும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பாஜக ஆட்சியில் அரசியல் சாசன தலைவரின் நிலை இதுதான். பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இந்தப் புகைப்படம் அப்பட்டமாக காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?