மனைவி, குழந்தைகளை கொலை செய்து சடலங்களுடன் 3 நாட்கள் உறங்கிய கணவன் : ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 2:48 pm
crime
Quick Share

மனைவி, குழந்தைகளை கொலை செய்து சடலங்களுடன் 3 நாட்கள் உறங்கிய கணவன் : ஷாக் சம்பவம்!!

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த கொலை சம்பவம் நெஞ்சை உலுக்க வைத்துள்ளது.

லக்னோ அருகே உள்ள பிஜினூர் பகுதியில் வசித்து வருபவர் ராம் லகன். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும்.

ராம் மற்றும் ஜோதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் ஜோதி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கணவன் ராம், செல்போனை ஒட்டுக் கேட்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் கணவர் ராமுக்கோ சந்தேகம் வலுத்தது. இதனால் கடந்த 28ஆம் தேதி கோபமடைந்த ராம், ஜோதியின் கழுத்தை துப்பட்டாவால் நெறுக்கி கொலை செய்துள்ளார்.

பிஞ்சுக்குழந்தைகள் கண் முன்னே இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியும் உள்ளார். இதனால் பயந்து போன ராம், தனது குழந்தைகள் வெளியில் உண்மையை சொல்லக்கூடும் என்பதால், அவர்களையும் கொலை செய்து விட்டு, சடலத்தை வெளியில் வீச காத்திருந்தார்.

ஆனால் அந்த தெருவில் ஆள் நடமாட்டம் இருந்ததால், தொடர்ந்து 3 நாட்களாக சடலங்களுடன் வசித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உடல் அழுகி துர்நாற்றம் வீச, ராம் வீட்டிற்கு கீழ் வசித்து வந்த வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் வலுத்தது.

உடனே மேல் வீட்டிற்கு சென்று பார்த்த போது, 3 பேரை கொலை செய்தது மட்டுமல்லாமல், சடலம் அருகே உறங்கிக் கொண்டிருந்த ராமை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தார்

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. கொலை செய்த ராம் லகனை கைது செய்தனர்.

Views: - 188

0

0