கோவையில் வருகிறது 8 கி.மீ. நடைபயிற்சி பாதை… சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் நேரில் ஆய்வு

Author: Babu Lakshmanan
27 June 2023, 10:47 am

நடப்போம் நலம் பெறுவோம் பொதுமக்கள் 8 கிலோமீட்டர் நடை பயிற்சி செய்யவுள்ள இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் கூறியதாவது :- தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருகிறார். 38 வருவாய் மாவட்டத்தில் எட்டு கிலோமீட்டர் நடை பாதையை அமைத்து மரம், இருக்கை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம். ஜப்பான் டோக்கியோ சென்ற போது 8 கிலோமீட்டர் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் தினம் தோறும் பத்தாயிரம் நடைபாதைகள் நடந்தால் உடல் சீராக இருக்கும். மக்களை நடப்பதற்கு பயிற்சி நடைபாதை அமைக்கப்படுகிறது.நடை வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் 8 கிலோமீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. கடந்த வாரம் மதுரையில் எட்டு கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது.

மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள் மாநகராட்சி ஆணையாளர் பாதையை தேர்வு செய்து பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. முதல்வர் 38 மாவட்டங்களில் பணிகள் துவங்கி வைக்கிறார். செந்தில் பாலாஜிக்கு நேற்று முன்தினம் ரெகுலர் ரூம் என்ற அடிப்படையில் ரூமுக்கு வந்துள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். கோவையில் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.

தமிழகத்திலேயே சிறந்த நடைபாதை இடம் கோவை பந்தய சாலையில் சிறப்பாக உள்ளது. வாலாங்குளம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடைபாதை அமைப்பது போன்ற பணி மாநகராட்சி செய்து வருகிறது. கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அங்கு செல்ல உள்ளோம். இன்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மூன்று திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம். என தெரிவித்தார்.

  • sai abhyankkar introducing in malayalam cinema through balti movie Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?