தமிழகத்திலிருந்து அடுத்த பிரதமர் அண்ணாமலை தான்… காமெடியன் முதல்வராக இருந்தால் நாடு நன்றாக இருக்குமா..? அய்யா வழி சிவசந்திரன் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
27 June 2023, 11:56 am
Quick Share

தமிழகத்திலிருந்து அடுத்த பாரத பிரதமர் அண்ணாமலை தான் என்றும், காமெடியன் முதல்வராக இருந்தால் நாடு நன்றாக இருக்குமா..? என நாங்குநேரியில் அய்யா வழி சிவசந்திரன் பேசியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. நெல்லை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இந்த நிர்வாகிகள் உரையாற்றினார்.

அப்போது மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசியதாவது :- ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அனுபவம் இல்லாத ஒரு அமைச்சர். இவரால் தேசிய போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தமிழக விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினிடையே ஊழல் ஊழல் செய்வதில் கடும் போட்டி நடக்கிறது. திமுக எம்பி கனிமொழியா, அமைச்சர் கீதா ஜீவனா, அனிதா ராதாகிருஷ்ணன் என மூவரும் கமிஷன் வாங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு ஊழல் செய்து வருகின்றனர். என்றார்.

அதனைத் தொடர்ந்து, ஆன்மீக பாடகரும், அய்யா வழி தொண்டருமான சிவசந்திரன் பேசினார் . அவர் பேசியதாவது :- பண்டாரங்கள் நாட்டை ஆள கூடிய காலம் வந்து விட்டது. மண்டைக்காட்டில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டமிட்டார். பொதுமக்கள் வரி பணத்தில் பேனா சிலை வைக்கப்பட்டுள்ளது. 2026 வரை இந்த சட்டமன்றம் நிலைக்காது. தமிழகத்தில் இருந்து அடுத்த பிரதமர் என்றால் அது அண்ணாமலை தான். அப்போது, ஆன்மீக பிரிவை நான் கேட்டு வாங்கி விடுவேன். சாமியார் ஓட்டை வைத்து நானும் வந்து விடுவேன். திராவிடம் என்று சொல்லும் திராவிட மாடலை அகற்றுவோம் என பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் நைனார் நாகேந்திரன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. மேலும், கூட்டத்திற்கு தாமதமாக வந்த சசிகலா புஷ்பா கூட்டம் முடிவதற்குள்ளேயே மேடையில் இருந்து இறங்கி அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார். இக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்று, மோடி அரசின் சாதனைகளையும், விளக்கியும் திமுகவை தாக்கியும் பேசினார்.

Views: - 331

0

0