ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு.. உதகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் பகுதியில் புரட்டி எடுத்த கனமழை.!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 7:59 pm
rain
Quick Share

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு.. உதகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் பகுதியில் புரட்டி எடுத்த கனமழை.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, காரமடையில் இன்று மாலைபலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால் இரண்டு மாதமாக சுட்டெரித்த கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர் இந்நிலையில் சிறுமுகை மற்றும் காந்தையூர் பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது மேலும் பலத்த சூறாவளி காற்று வீசியதால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியுடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இதே போல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில் இன்று மதியம் முதல் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை லேசாக சாரல் மலையுடன் பெய்யத் துவங்கிய மழை பின்னர் கனமழையாக மாறியது.

இதனால் வெப்பம் தணிந்து சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோசன நிலை உருவானது. இதேபோல் கடம்பூர் மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 249

0

0