இனி ஆக்ஷன் தான்..ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 6:23 pm
Ration Shop - Updatenews360
Quick Share

இனி ஆக்ஷன் தான்..ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை!

ரேஷன் கடைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதாவது, வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய கூட்டுறவுத்துறை, பணி நேரத்தில் ஒழுங்காக கடைகளை திறக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க: என் பொறுமையை சோதிக்காதே.. எங்கிருந்தாலும் உடனே நாடு திரும்பு : பேரன் பிரஜ்வலுக்கு முன்னாள் PM எச்சரிக்கை!

சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 126

0

0