கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்… கார் மோதி பைக்கில் சென்றவர் பலி ; நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்..!!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 5:00 pm
Quick Share

குமரி மாவட்டம் படந்தாலுமூடு அருகே இருசக்கர வாகனம் மீது ஸ்கார்ப்பியோ கார் மோதி விபத்து ஒருவர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (62). தொழிலாளியான இவருக்கு சொந்தமாக தையாலுமூடு பகுதியில் ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நின்றிருந்த ரப்பர் மரங்கள் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக சாய்ந்து போயுள்ளது.

மேலும் படிக்க: திரும்பும் திசையெல்லாம் பகை தான்… சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து… திருச்சி சூர்யா சொன்ன பகீர் தகவல்!!

சாய்ந்த மரங்களை சரி செய்ய வேண்டி குமரேசன் நாகக்கோடு பகுதியை சேர்ந்த மணிராஜ் (58), என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காக அழைத்து சென்றுவிட்டு பணி முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்ததனார். படந்தாலுமூடு பகுதியில் வைத்து எதிரே அதிவேகமாக வந்த ஸ்கார்ப்பியோ கார் ஒன்று பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடியபடி கிடந்த நிலையில், அக்கம்பகத்தினர் அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து இருவரும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மணிராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த களியக்காவிளை போலீசார், விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை சிசிடிவி காட்சிகளை கொண்டு அடையாளம் கண்டனர்.

தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜெனலட்சுமன் என்பவரை பிடித்து அவரது காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 289

0

0