திரும்பும் திசையெல்லாம் பகை தான்… சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து… திருச்சி சூர்யா சொன்ன பகீர் தகவல்!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 4:10 pm

எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாகத்தான் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார் என்று திருச்சியில் பாஜக சூர்யாசிவா தெரிவிதிதுள்ளார்.

சமூக வலைதளமான யூடியூபில் முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும் அவமானப்படுத்தும் விதமாக பேசிய சவுக்கு சங்கர் மீது பாரதிய ஜனதா கட்சி ஓபிசி சார்பில், மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யாசிவா திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பிறகு எஸ்பி வேலுமணி கைக்கு மாறுகிறதா அதிமுக..? எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சொன்ன பரபரப்பு தகவல்…!!

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூர்யா சிவா கூறியதாவது :- பெண் காவலர்களையும், பெண்களையும் இழிவாக பேசியதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 35 புகார்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்குலத்தோர் சமூகத்தை பற்றி இழிவாக பேசியதற்காக கோவையில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் புகழை பாதுகாப்பது ஓபிசி அணியின் கடமை என்பதால் சவுக்கு சங்கர் மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேர்மையான அதிகாரி. ஆனால் சவுக்கு சந்தர்ப்ப பல இடங்களில் பகையை சம்பாதித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கைக்கூலியாக செயல்பட்டு விமர்சனங்களை பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி குறித்து எத்தனை வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளார் என்பது கூட தெரியாது.

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உடன் நீண்ட நாள் சவுக்கு சங்கர் பயணித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் மரணத்தில் காரை ஓட்டி வந்த மல்லிகா நல்லுசாமி, சவுக்கு சங்கரின் நண்பர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பலவற்றை ஆப் செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி உடன் நீண்ட நாள் பயணித்து இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி, குறித்த ரகசியங்கள் அறிந்திருப்பதால் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. அதே நேரம் சிறையில் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது என்பது சவுக்கு சங்கர் உயிர் மீது அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது.

மேலும், தேவர் ஜெயந்தியின் போது ஆர்.பி.உதயகுமார் மற்றும் தனது எஜமான் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை இழிவுசெய்த சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக சவுக்கு சங்கர் இவ்வாறு செயல்படுவதாகவும் சூர்யா சிவா குற்றம் சாட்டினார்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 374

    0

    0