உல்லாச விடுதியில் தங்கும் இளம்பெண்கள்… அசம்பாவிதத்திற்கு வாய்ப்பு… நெருக்கடி கொடுக்கும் நாடார் பேரவையினர்..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 7:35 pm

தூத்துக்குடியில் பெற்றோருக்கு தெரியாமல் இளம்பெண்கள் உல்லாச விடுதியில் தங்குவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடார் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட செயலாளா் மாரியப்பன் நாடார் மற்றும் தலைவா் ரவிசேகா் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனா். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் தேவராஜ் கூறுகையில், “தூத்துக்குடி பெரிய மார்க்கெட் நடைபாதை மற்றும் வாகன நிறுத்தம் பற்றி மார்க்கெட் வரும் வியாபாரிகள் மூடைகள் தூக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள கார் பார்க்கில் செல்ல முடியாது.

அதனால் காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனைத்து வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் நிறுத்தி பொருட்களை வாங்கி செல்ல அனுமதி அளிக்க வேண்டும். வஉசி மார்க்கெட்க்கு பஸ் வருவதில்லை. அதனால் அங்குள்ள வியாபாரிகள் மிகவும் நஷ்டம் அடைந்து உள்ளார்கள்.

சேர்வைகார மடத்தில் உள்ள கிராஃப்ட் உல்லாச விடுதியில் தமிழக கலாச்சாரம் சீரழியும் வகையில் கல்லூரி பெண்கள் மற்றும் தாய் தந்தைக்கு தெரியாமல் இங்கு தங்குகிறார்கள். யாரும் கண்டு கொள்வதில்லை. பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் செபத்தை சரவணன், மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகவேல், மாநகர செயலாளர் பட்டுராஜா, மற்றும் வஉசி மார்க்கெட் வியாபாரிகள் பலா் கலந்து கொண்டனர்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…