‘கவுன்சிலரை காணவில்லை’… குப்பை கூளமாக காட்சியளிக்கும் தெருக்கள் ; கருமத்தம்பட்டி நகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
27 July 2023, 5:06 pm

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் குப்பைகளை அள்ளுவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அதில், குறிப்பாக 15வது வார்டு கணேசபுரம் மூணாவது வீதி பகுதியில் மட்டும் குப்பை பெட்டி இரண்டாவது முறை மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெட்டி முழுவதும் விரிசல் காணப்பட்டு வருகின்றது. மற்ற எல்லா வார்டுகளிலும் குப்பைகளை முறைப்படி நகராட்சி வாகனம் குப்பைகளை எடுத்து வருகின்றன.

கணேசபுரம் பகுதியில் மட்டும் சரியாக தெரு விளக்கு எரிவதில்லை, குப்பைகளை ஒன்றரை மாதம் ஆகியும் இதுவரை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவது மட்டுமில்லாமல் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

நகராட்சி வாகனம் வந்து குப்பை கிடங்கு முன்பு நின்று புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதியில் தெரு நாய் தொந்தரவு அதிகமாக இருப்பது மட்டுமில்லாமல், அக்கம்பக்கத்தில் உள்ள வீட்டினர் மாலை ஆறு மணி அளவில் நாய்களை அவிழ்த்து விட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

தெரு விளக்கு மற்றும் சரியான முறையில் குப்பைகளை அள்ள வேண்டும் மற்றும் தெரு நாய் தொந்தரவுகளை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 ஆவது வார்டு கவுன்சிலர் கவுசல்யா தேவி கண்டு கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே எழுந்துள்ளது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!