அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத் தொகை… அதுவும் அண்ணா பிறந்த ஊரில்… வெளியான புதிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2023, 4:00 pm

திமுக ஆட்சிக்கு வரும் முன் குடும்பத்தலைவரிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக சுமார் 2 வருடங்களுக்கு பின் இந்த திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது.

தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கும் மட்டும் என நிபந்தனைகளோடு மாதம் ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

இந்த தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாக நடத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கான தகுதி வாய்ந்தவர்களை அடையாளம் காண, தமிழக அரசு சார்பில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 5 லட்சம் பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர்.

இந்த மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க கால அவகாசம் இருப்பதால் இன்னும் பல விண்ணப்பங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?