‘விளையாட்டு செய்திகளை அப்பறம் பார்க்கலாம்’ ; பாஜக – அதிமுக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் கிண்டலான பதில்..!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 2:33 pm

பாஜக -அதிமுக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு ” விளையாட்டு செய்திகளை பிறகு பார்க்கலாம் ” என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சிப்காட் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பில் “நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” என்ற புகைப்பட மாடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் டிஆர்பி ராஜா இணைந்து திறந்து வைத்து பார்வையிட்டனர். அதன்பின் குறும்படத்தை வெளியிட்டு, அதனை அதிகாரிகளுடன் கண்டுகளித்தனர்.

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- நிறுவனங்களின் நாயகன் கலைஞர் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்துள்ளார். இந்த புகைப்பட கண்காட்சி தமிழகம் உள்ள அனைத்து சிப்காட் நிறுவனங்களிலும் நிறுவப்படும். தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் குறும்படம் திரையிடப்படும்.

தொழில் முதலீட்டு மாநாடு நடத்தப்பட உள்ளோம். இந்த மாநாடு வெறும் பொருளாதாரத்தை குறித்து மட்டுமில்லாமல் தமிழக இளைஞர்களின் அறிவு சார்ந்த வளர்ச்சியை நோக்கி அமையும். ஜனவரி 7,8 தேதிகளில் தொழில் முதலிட்டோர் மாநாடு துவங்கும் என தெரிவித்தார். மக்களின் ஆதரவோடு பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெறும், என தெரிவித்தார்

அப்போது, பாஜக -அதிமுக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு” விளையாட்டு செய்திகளை பிறகு பார்க்கலாம் ” என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்துள்ளார்.

  • santhanam new movie directed by gvm இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!