தங்கம் விலை இன்று ஏறியிருக்கா..? குறைஞ்சிருக்கா…? இதோ இன்றைய நிலவரம்…!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 10:57 am

தங்கம் விலை இன்று ஏறியிருக்கா..? குறைஞ்சிருக்கா…? இதோ இன்றைய நிலவரம்…!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு தொடர்ந்து அதிகரித்தே காணப்பட்ட தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,080க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,635ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,840ஆக விற்பனையாகிறது. 

வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.78.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!