மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன் – எகிறவைக்கும் எதிர்பார்ப்பு!

Author: Rajesh
4 December 2023, 3:22 pm

தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் வித்தியாசமான படைப்பின் மூலம் மக்களை வியக்க வைத்தார். 2006ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கி வெற்றிப்படைத்தார். தொடர்ந்து அஞ்சாதே , நந்தலாலா , யுத்தம் செய் , முகமூடி , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ,பிசாசு , துப்பறிவாளன் ,சைக்கோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக கோலிவுட்டில் தடம் பதித்தார்.

mysskin

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இவர்களுடன் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி எனப் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

மேலும், இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக மக்களுக்கு படத்தின் மீதான கவனம் அதிகரித்துள்ளது.

  • vishal fainted in transgender festival because of not eating lunch விஷால் மயங்கி விழுந்தததற்கான காரணம்? அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த மேனேஜர்! அடப்பாவமே…