வீதிப்பெயரை கருப்பு மை வைத்து அழித்த திமுக பிரமுகர்.. கடும் எதிர்ப்பு காட்டிய பாஜக : உடனே நடந்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 1:46 pm

வீதிப்பெயரை கருப்பு மை வைத்து அழித்த திமுக பிரமுகர்.. கடும் எதிர்ப்பு காட்டிய பாஜக : உடனே நடந்த ட்விஸ்ட்!!

கோவை பந்தய சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். திமுக பிரமுகரான இவர், ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்ற பெயரில் சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 66வது வார்டில் ஜி.டி. நாயுடு தெரு என்ற பெயர் பலகை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டு இருந்தது.

இதில் இருந்த சாதி பெயரை ரகுநாத் கருப்பு மை பூசி அழித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் ஜிடி நாயுடு பெயரில் இருந்த சாதி பெயரை கருப்பு மை பூசி அழித்ததற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து முகநூல், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரகுநாத்தையும், திமுகவையும் விமர்சித்து அவர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக, கருப்பு மையை மாநகராட்சி பணியாளர்களை கொண்டு மீண்டும் அழித்துள்ளனர்.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?