தமிழகத்தில் சொந்த கிராமத்தில் டாப் 10 காளைகளுடன்… மாட்டு பொங்கலை கொண்டாடிய இலங்கை ஆளுநர்!!

Author: Babu Lakshmanan
16 January 2024, 2:31 pm
Quick Share

சிவகங்கை மாவட்டம், சொக்காதபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம்கண்டு பிரபலமான 10 காளைகளுடன் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பூர்வீக கிராமத்தில் மாட்டு பொங்கலை கொண்டாடினார்.

சொக்கநாதபுரம் அருகேவுள்ள கத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தொண்டமான். இவர் இலங்கை நாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், இவரிடம் தற்சமயம் தமிழகத்தின் மிக பிரபலமான பேட்ட காளி, செம்மாலு, காங்கேயம், புலி, பாகுபலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளன.

இந்த காளைகள் அனைத்தும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், சிராவயம், கண்டிப்பட்டி உள்ளிட்ட பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற காளைகளாகும். இந்நிலையில் இன்று மாட்டு பொங்கல் என்பதால் அவரது பூர்வீக கிராமத்தில் பொது மக்களுடன் இணைந்து அந்த காளைகள் அனைத்திற்கும் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் காளைகள் அனைத்திற்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து பாரம்பரிய வழக்கப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜல்லிக்கட்டு போட்டியை சர்வதேசாக போட்டியாக மாற்றும் முயற்சியாகவே இந்த ஆண்டு இலங்கையில் ஜல்லிக்கட்டு நடந்தப்பட்டுள்ளது. இலங்கை சென்ற நமது தமிழர்கள் அப்போது தங்களது உடைகளையும், கலாச்சாரங்களை மட்டுமே எடுத்துச் சென்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தை இலங்கையில், நமது தமிழர்கள் வளர்த்தும், பாதுகாத்தும் வருகின்றனர், என்றார்.

Views: - 187

0

0