அரசியல் அத்தியாயத்தை தொடங்கிய நடிகர் விஜய்… தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்!!

Author: Babu Lakshmanan
2 February 2024, 2:52 pm

டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் அவரது கட்சியை பதிவு செய்ததையடுத்து தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்தார். “விஜய் மக்கள் இயக்கம்” என்பதை அரசியல் கட்சியாக பதிவு செய்து “தமிழக வெற்றி கழகம்” என அரசியல் கட்சி தொடங்கப்பட்டதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். கோவையிலும் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், இயக்க கொடியுடன் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறிச்சி பகுதியில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி, இளைஞரணி தலைவர் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக முழக்கங்களை எழுப்பினர். இதேபோல, கோவையில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விஜய் ரசிகர்கள் பஸ் நிலைய ரவுண்டான பகுதியில் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி தனது முதற்கட்ட பணியை தொடங்கினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!