சர்ச்சையான கோவில் கும்பாபிஷேக பேனர்… இளைஞர்களின் அட்ராசிட்டி… போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Author: Babu Lakshmanan
11 February 2024, 2:31 pm

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மாசி பெருந் விழாவை ஒட்டி சில இளைஞர்கள் மது பாட்டில்களை கையில் ஏந்தியவாறு மது கூடத்தில் அமர்ந்திருப்பது போல புகைபடத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு, தகவல் அறிந்து போலீசார் பேனரை அகற்றினர்.

திண்டுக்கல் மாநகராட்சி தெற்கு ரத வீதி பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது மேலும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெரும் திருவிழா தொடங்கியுள்ளது.


திருவிழாவிற்கும், கும்பாபிஷேகத்திற்கும் வருகை தரும் பொது மக்களை வரவேற்கும் விதமாக பல்வேறு தரப்பினர் தெற்கு ரத வீதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.

அந்த வகையில், அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒரு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.Bஅந்த பிளக்ஸ் பேனரில் கையில் மது கோப்பைகள், மது பாட்டில்கள் வைத்துக் கொண்டு ஒரு மதுக்கூடத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு அந்த பேனரில் கும்பாபிஷேக விழா ,மாசி பெரும் திருவிழா என்ற தலைப்பிட்டு “திருந்தி வாழும் அளவிற்கு நாங்கள் கெட்டுப் போக இல்லை”, “அடுத்தவருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நாங்கள் நல்லவர்களும் இல்லை” என்ற வாசகத்துடன் பிளக் பேனர் வைத்திருந்தனர்.

இந்த பிளக்ஸ் பேனர் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த பிளக்ஸ் பேனரை மட்டும் அப்புறப்படுத்தினர்.

  • vijay character name in jana nayagan leaked in internet ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்- ஜனநாயகன் விஜய் கதாபாத்திரத்தின் பெயரில் உள்ள சூட்சமம்?