பேஸ்புக்கில் திமுக முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு… பாஜக மாவட்ட துணை தலைவர் சிறையில் அடைப்பு

Author: Babu Lakshmanan
11 February 2024, 5:13 pm

திருவாரூரில் சமூக வலைதள பக்கத்தில் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்ட பாஜக மாவட்ட துணை தலைவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி முகநூல் வலைதள பக்கத்தில் Sadha Sathish Bjp என்ற Facebook பக்கத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ, புகைப்படம் மற்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட, தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் என்பவர் திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் தொடர்பாக திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் படி, குற்றவாளியை பிடிப்பதற்கு திருவாரூர் திருவாரூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக Sadha Sathish Bjp என்ற Facebook பக்கத்தை ஆய்வு செய்து வந்தனர்.

இவ்வாறு தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையிலான கருத்துகளை பதிவிட்டு வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுக்கா, கிளேரியம், கப்பலுடையான், தெற்கு தெருவை சேர்ந்த சதாசிவம் மகன் சதீஷ்குமார் @ சதா சதீஷ் (திருவாரூர் மாவட்ட பாஜக துணை தலைவர்) கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி 23ந்தேதி வரை நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் வைக்கப்பட்டார்.

மேலும், சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற அவதூறு பரப்பும் வகையிலும், சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுவோர் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?