மண்ணை கொட்டி வெயிட் ஏத்தறாங்க..குப்பை கூளமாகும் கோவை : CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2024, 5:46 pm

CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சியில் காண்டிராக்டர்ஸ் சங்கத்தை சேர்ந்த 25 ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குப்பை அகற்றும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்கள்.

கடந் 6 மாதம் முன்பு வெளி மாநிலத்தை சேர்ந்த சதர்ன் கம்பெனிக்கு மொத்தமா காண்ட்ராக்ட் கொடுத்திருந்தார்கள். 25 காண்ட்ராக்டர் செய்த வேலையை அந்த ஒரு நிறுவனம் சரியாக செய்திருந்தார்கள். ஆனால் அந்த 25 பேரும் தினமும் காலை 6 மணிக்கே குப்பைகளை அகற்றி வீட்டை பார்ப்பது போல கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.

ஆனால் தற்போது மொத்தமும் தனியாருக்கு கொடுக்கும் நிலைமை உருவாகிவிட்டது. அதனால் அந்த சதர்ன் கம்பெனி சரியா குப்பை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது.

ஆனா குப்பை கிடங்குக்கு போற குப்பை வெயிட் மட்டும் அதிகமாக உள்ளது. அதாவது சாலையில் குப்பைகள் கொட்டி கிடக்கும் நிலையில், அவர்கள் தினமும் 500 டன் குப்பை அள்ளுவதாக காட்டியிருக்கிறார்கள்.

குப்பையின் எடை அதிகமாக்குவதற்காக சாலையோரம் கிடக்கும் மண், ஜல்லி, கல் என எல்லாத்தையும் அள்ளிப் போட்டு அதிக டன் குப்பை எடுத்ததாக கணக்கு காட்டுகிறார்கள்.

கடந்த காலங்களில் எடுத்ததை விட தற்போது 500 டன் அதிகமாக வர மாதிரி சொல்றாங்க. கடந்த காலங்களில் 25 காண்டிராக்டர்கள் குப்பை எடுக்கும் வேலை செய்த போது பெரும்பாலான இடங்களில் குப்பை இல்லாமல் சுத்தமா இருந்தது.
ஆனால் இப்போ குப்பைகள் பல இடங்களில் அதிகமாக தேங்கியுள்ளது. அந்த கம்பெனி ஏன் வேலை செய்யவில்லை என மாநகராட்சியும் கேட்கவில்லை. அந்த கம்பெனியை விட்டா வேற வழி இல்ல என்பதால் மாநகராட்சி அதை கண்டுகொள்ளவும் இல்லை.

கோவையில் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை கொடுக்க வேண்டும், அந்த பணிகளை திறம்பட செய்யாவிட்டால், எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதைவிட்டு வெளி மாநில ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்து பணியும் சுத்தமாக இல்லை, நகரமும் சுத்தமாக இல்லாததால் சுகாதார சீர்கேடு ஆகிறது.

தற்போது கோடை காலமாக இருக்கிறதால பரவாயில்ல. இதே மழை காலமாக இருந்தால் தேங்கி கிடக்கிற குப்பையால வேகமா நோய் பரவியிரும்.

மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்கு அனுபவம் வாய்ந்த காண்ட்ராக்டர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு தனியார் கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்துவிட்டு அவர்கள் சரியாக வேலை செய்யாவிட்டாலும் அப்படியே விடுவது சரியல்ல.

குறைந்தபட்சம் 4 ஒப்பந்ததாரர்களுக்காவது பணியை பகிர்ந்து கொடுத்து இருந்தால் ஒருவர் சரியாக செய்யாவிட்டாலும் இன்னொருவர் மூலமாக பணியை செய்ய வைத்திருக்க முடியும். மாநகராட்சியில் இருக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு குப்பை அகற்றும் பணி சம்பந்தமாக பயிற்சி கொடுத்திருக்கலாம்.

அவர்கள் பணியை சரியாக செய்யாததால் ஒட்டுமொத்த மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குப்பை அகற்றும் பணியை சரியாக செய்யவில்லை என செய்திகள் வெளியாகிறது. இது மன வருத்தம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

நமது சங்க உறுப்பினர்கள் செய்த பணிகள் சிறப்பாக இருந்ததாக கூறப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் மறுபக்கம் சுகாதார சீர்கேடாகி வருவது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. கூடிய விரைவில் மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் செயலாளரும், KCP Infra Limited நிறுவனருமான K. Chandraprakash தெரிவித்துள்ளார்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!