தே* **ப***லே…. தனியார் காற்றாலை நிறுவனத்தை எதிர்த்து போராடியவர்கள் குண்டுகட்டாக கைது ; விவசாயிகளை ஆபாச வார்த்தைகளில் திட்டிய டிஎஸ்பி..!!

Author: Babu Lakshmanan
1 March 2024, 8:25 am

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் காற்றாலை நிறுவனம் மூலம் அமைக்கப்படும் மின்கம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை டிஎஸ்பி கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அப்பியம்பட்டி பகுதியில் தனியார் காற்றாலை அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்துச்செல்ல உயர் அழுத்த மின்கம்பங்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மின்கம்பங்கள் அமைப்பதை கடந்த வாரம் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் நேற்று போலிஸ் பாதுகாப்புடன் வந்த தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்களை அமைக்க முயன்றபோது, அதை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளை கள்ளிமந்தையம் போலீசார் குண்டுகட்டாக கைது செய்யதனர். அப்போது, மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், வழுக்கட்டாயமாக கைது செய்த விவசாயி ஒருவரை ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • ajith kumar putting condition on producers for his next movie அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?