சினிமாவில் தோற்று போய் வரல, படம் இல்லாமல் வரல.. விஜய் குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்..!

Author: Vignesh
20 March 2024, 10:04 am

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Vijay - Updatenews360

இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்த நிலையில், 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார்.

samuthirakani

இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் கொடுத்துள்ளார். அதில், அவர் படத்திற்கு ரூபாய் 200 கோடி சம்பாதிக்கும் ஒரு மனுஷன் இனி நடிக்க மாட்டேன்னு சொல்ல தைரியம் வேணும். அவர்கிட்டயே, நிறைய இருக்கு அவர் அரசியலுக்கு வந்து திருட போறது இல்ல. சினிமாவில் தோற்றுப் போய் வரல, படம் இல்லாமல் வரல, மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று வருகிறார். அவருக்கு எனது சல்யூட் என பெருமையாக சமுத்திரக்கனி பேசியுள்ளார்.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?