ஒரு வேல அப்படி இருக்குமோ.. ஷூட்டிங்கில் இருந்து தெறித்து ஓடிய ஸ்ரேயா சரண்..!

Author: Vignesh
20 March 2024, 10:30 am
shriya saran
Quick Share

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி பின்னர் மழை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர நடிகை ஸ்ரேயா சரண். நல்ல அழகு துரு துரு நடிப்பு என அறிமுகமான புதிதிலே அத்தனை ரசிகர்களையும் வளைத்துவிட்டார்.

தெலுங்கு , தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். இதனிடையே திடீரென 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கப்சா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது 40 வயதாகும் ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து யங் ஹீரோயின் போன்று அழகு குறையாமல் நடித்து வருகிறார்.

shriya saran - updatenews360 1

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை ஸ்ரேயா பேசும்போது நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டேன். ஒரு முறை படப்பிடிப்பை விட்டு ஓடிப் போய் விட்டேன். கந்தசாமி படத்தில் நடித்த போது ஒரு காட்சிக்காக நிறைய டேக்கள் எடுத்தார்கள். ஆனால், ஹீரோ விக்ரம் பொறுமையாக என்னோடு நடித்ததை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது.

shriya saran - updatenews360 1

அதேபோல், ரஜினி அவர்களுடன் சிவாஜி படத்தில் நடித்த போது அவர் எனக்கு பல நல்ல விஷயங்களை நல்ல அறிவுரைகளை கூறினார். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் சக்சஸ்ஃபுல் படங்கள் செய்கிறீர்கள், நாளை இந்த நிலைமை மாறிவிடலாம். தோல்விகளை கூட சந்திக்க வேண்டிவரும் இருந்தாலும், ரசிகர்களோடு மகிழ்ச்சியாக மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னதாக ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.

Views: - 58

0

0