என்னால முடியல ஷூட்டிங்கில் பீல் பண்ணி அழுத சிம்பு.. உண்மையை உடைத்த பிரபலம்..!
Author: Vignesh27 April 2024, 4:44 pm
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுவர் சில்வா. இவர் ஸ்டண்ட் இயக்குனராக மட்டும் அல்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் தனது மிரட்டலான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான அருண் விஜயின் மிஷன் படத்திற்கு ஸ்டண்ட் சில்வாதான் இயக்குனராக பணியாற்றினார். அந்த படத்தில், இடம்பெற்ற அனைத்து ஆக்சன் காட்சிகளும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்தது.
மேலும் படிக்க: கமல் ஃபுல் ஃபார்மில் இருக்காரோ.. ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளமாம்..!
பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சில்வா சமீபத்தில், தன்னுடைய மனைவி மற்றும் மகள், மகனுடன் பேட்டி ஒன்றில் பங்கேற்று நடிகர்களுடன் நடந்த பல சம்பவங்களை வெளியிட்டுள்ளார். அதாவது, தனுஷின் வளர்ச்சி தனக்கு மிகவும் சந்தோஷம் என்றும், நடிகராக இருந்து பல விஷயங்களை அவர் செய்து வருகிறார்.
வணங்கான் படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் பாலாவுடன் விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, எங்களுக்கு முன்பு தனுஷ் இருந்தார். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் எழுதிக் கொண்டே இருந்தார். பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது. மேலும், சிம்பு ஒரு அதிசய குழந்தை விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் போது சிம்புவிடம் நான் சொல்லி இருக்கிறேன். நான் ரொம்ப நேரமாக கம்போஸ் பண்ணி வைத்திருக்கிறேன். சிம்பு எங்கே உட்கார்ந்துட்டு வந்ததும் ரெடி டேக் போகலாம் என்று சொன்னார்.
மேலும் படிக்க: பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!
அப்போது, நான் என்னத்த டேக் போவிங்க நீங்க பெருசா பண்ணிட போறாருன்னு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அதன்பின்னர், அவர் பண்ணதை பார்த்து என்னை காதலிக்க வைத்து விட்டார். அச்சம் என்பது மடமையடா படத்தில் ஓட முடியவில்லை என்று ஷூட்டிங்கில் அழுது ஃபீல் பண்ணினாரு அதன் பின் ஆறு மாதம் கழித்து மநாடு படத்தில் என்னை என்ன வேண்டுமானாலும் செய் என்று சொன்னார் என ஸ்டெண்ட் மாஸ்டர் சில்வா தெரிவித்திருக்கிறார்.
0
0