தேர்தல் அறிக்கையை காப்பி அடிச்சோமா? அதிமுக அறிக்கை தாமதமாக எழுத்துப் பிழையே காரணம் : ஆர்பி உதயகுமார் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 6:20 pm

தேர்தல் அறிக்கையை காப்பி அடிச்சோமா? அதிமுக அறிக்கை தாமதமாக எழுத்துப் பிழையே காரணம் : ஆர்பி உதயகுமார் விளக்கம்!

தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 10,000 மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி பேசும்போது முதலில் புரட்சித்தலைவர் எனக் கூறிவிட்டு சாரி புரட்சித் தமிழர் என எடப்பாடியை முன்னிலைப்படுத்தி பேச்சை துவக்கினார்.

தேர்தல் வாக்குறுதி குறித்து கேட்டதற்கு பிரச்சாரத்தின் போது தேர்தல் வாக்குறுதி குறித்து பேசுவதாக அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அதிமுக தேர்தல் அறிக்கை பிரின்டிங் மிஸ்டேக் ஏற்பட்டிருந்ததால் ஒரு நாள் காலதாமதமாக வந்தது, திமுகவிற்கு முன்னால் நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரித்தோம் அதற்கான ஆதாரம் உள்ளது.

பாரத பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதினால் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வெளிச்சம் கிடைத்து வருகிறது, அவர் வந்து சென்ற பிறகு அவர்கள் இருட்டுக்குள் சென்று விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!