அதிமுகவை ஏன் ஓரங்கட்டுகிறீர்கள்.. ஊடகங்களை பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பிய திமுக அமைச்சர்!!
Author: Udayachandran RadhaKrishnan16 ஏப்ரல் 2024, 6:59 மணி
அதிமுகவை ஏன் ஓரங்கட்டுகிறீர்கள்.. ஊடகங்களை பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பிய திமுக அமைச்சர்!!
கோவை பீளமேடு பகுதியில் உள்ள திமுக தேர்தல் பணிமனையில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையினை வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் வெளியிட்டனர்.
கோவை ரைசிங் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் நகர்புற உள்கட்டமைப்பு, எல்.அன்.டி நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை, நீர் மாசு கட்டுப்பாடு, சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும் போது : கடந்த இரு வாரங்களாக நிறைய தலைவர்கள் வாக்குகளை சேகரித்துள்ளனர். கோவையில் மகத்தான வெற்றி உறுதி என்ற நிலையில் இருக்கின்றோம். கோவைக்கான தேர்தல் அறிக்கையினை தயாரித்து இருக்கின்றோம். திமுக தேர்தல் அறிக்கை மீதுதான் மக்களுக்கு எப்பொதும் எதிர்பார்ப்பு இருக்கும். சொல்லாத விடயங்களையும் செய்த கட்சி திமுக.
பொறுப்புணர்ச்சியுடன் எந்த திட்டங்கள் தேவை, எதை செய்ய முடியும் என்பதை அறிக்கையாக தயாரித்துள்ளோம். டெல்லியில் ஆட்சி மாற்றம் உறுதி. ஆவணங்களை எரிக்க துவங்கி இருக்கின்றனர். டெல்லியில் ஆட்சி மாற்றம் உறுதியாகும் நிலையில் கோவைக்கு புதிய உதயம் கிடைக்கும்.
முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போது கொண்டு வரப்பட்ட சிங்கார சென்னை திட்டம் போல கோவை ரைசிங் என்ற தலைப்பில் கோவையின் அடுத்த பரிணாமத்திற்கான அடித்தளத்தையிட்டுள்ளோம். நகர் உட்கட்டமைப்பு, நீர்வளம் , போக்குவரத்து, ரயில்வே திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கம், இரண்டு சிப்காட் என பல திட்டங்களை இதில் சொல்லி இருக்கின்றோம். நீர் மாசை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல்நோக்கு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும். விமான நிலையம் மேம்பாடு செய்யப்படும். மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் துவங்கப்படும்.
சிறுவாணி, பில்லூர் அணைகள் தூர்வாரப்படும். வெல்டிங், டிரில் மேனு பேச்சுரிங்க்காக தனி தொழில் போட்டை அமைக்கப்படும். ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்து வெளியேறுவதற்கான அறிகுறிகள் டெல்லியில் தெரிகின்றது. பா.ஜ.க சொன்னதை செய்த சரித்திரம் கிடையாது, 3,500 நாட்களில் பாஜக செய்யாத வாக்குறுதியை 500 நாட்கள் செய்வேன் என்றால் எப்படி நம்புவது.
திமுக சொன்னதை செய்து இருக்கின்றது. அண்ணாமலை தூங்கி கொண்டு இருக்கின்றார். திமுகவிற்கு அதிமுகவுடன் தான் போட்டி. ஏன் அதிமுகவை பற்றி கேட்கவே மாட்டேன் என்கின்றீர்கள்.
கருத்துகணிப்பை பார்ப்பதை விட மக்கள் மனதை பாருங்கள். அதிமுக ஆட்சியில் தரமற்ற கட்டுமானத்திற்கு பெயர் போனது. அதையும் திமுக சரி்செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களையே சந்திக்காதவர் பிரதமர் மோடி.
மேலும் படிக்க: மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1 சவரன் தங்கம் ₹1 லட்சம் ஆகும் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!!
அனைத்து வளர்ச்சி திட்டங்களை மக்களுக்கானதாக மாற்றி கொண்டு இருப்பது திமுக ஆட்சியில்தான். முக்கியமான திட்டங்களாக இருந்தால் அதை தொடர்ந்து செயல்படுத்தி இருக்கின்றோம். திமுக ஆட்சியில்தான் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மின்சாரத்திற்கான நிறைய திட்டங்கள் இருக்கின்றது. இனி வரும் காலங்களில் வருமான வரித்துறை, அமலாக்க துறை செயல்பாடுகள் குறையும் என எதிர்பார்க்கின்றேன்.
தவறாக ஏதாவது செய்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் அதிகாரிகளுக்கு வந்துவிடும். ஓரே தேர்தல் ஓரே நாடு என்ற கோட்பாடு அவர்களுக்கு பின்னடைவை கொடுக்கும். செங்கல் சூளை விவகாரத்தில் சுற்றுசுழல் , விவசாயிகள் ஆகியோருக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுவரை வரலாறு காணாத வெற்றியை கணபதி ராஜ்குமார் பெறுவார் எனவும் அமைச்சர் என தெரிவித்தார்.
0
0